news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரான் போர் விரைவில் முடியும்: எண்ணெய் விலை குறையும்

அணு ஆயுதங்கள்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph oil

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

  • ஈரானின் அணு ஆயுத சக்தி அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆகவே போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்றார்.
  • ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நேரிடும் என்பதாலேயே, அந்நாட்டின் மீது போர் தொடுத்து அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

2026ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஹென்றி காகன் மற்றும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் கென்சோ சோய் ஆகிய இருவருக்கும் 2026ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கண்ணாடி பிம்பம்' தொடர்பான மர்மத்தை கண்டறிந்ததற்காக இருவருக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி கைது

  • இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே நிதி மோசடி மற்றும் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். ஷிராந்தி நடத்திய சிரிலிய சவியா அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணையின் ஒருபகுதியாக இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.


Related Link
கருங்கடல் பகுதியில் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்

கருங்கடல் பகுதியில் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved