ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போர்கப்பல்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மற்றும் மத்திய கிழக்கில் கடல்சார் பாதுகாப்பு பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன், 321 நாட்களுக்குப் பிறகு சான் டியாகோ திரும்பியது.
ஒரு துறைமுகத்தில் கூட நங்கூரமிடாமல் தொடர்ச்சியாக 265 நாட்கள் கடலில் கழித்த, கப்பல் பணியாளர்கள், மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களை, அவர்களது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டி
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெற்ற உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டியில், கனடாவைச் சேர்ந்த 61 வயது டோனா ஜீன் வைல்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான PLANK உடற்பயிற்சி போட்டியில் தொடர்ந்து 5 மணி நேரம் PLANK-ல் இருந்து சாதனையை நிகழ்த்தினார். கடந்த 2024-ஆம் ஆண்டு அவர் படைத்த 4 மணி நேரம் 30 நிமிட சாதனையையும் இதன் மூலம் முறியடித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக இல்லை
ரஷ்யாவின் கொடூர தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு, அமெரிக்கா உதவத் தயாராக இல்லை என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு நகரமான கிரமடோர்க்ஸ் ((Kramatorsk)) மீது ரஷ்யா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களில் மட்டும் அந்நாட்டில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.