Also Watch
Read this
சென்னையில் முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, டில்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு முதல்வா் விஜய் சென்ற நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு தலைவர்களும், சென்னையில் சந்தித்துப் பேசுவது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ராகுல்காந்தி
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 'மாணவர்கள் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
டில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த ராகுலை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

முதல்வர் விஜய் வீட்டுக்கு...
அங்கிருந்து ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றார். அங்கு இருவரும் கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

நீலாங்கரை இல்லத்தில் இருந்து ராகுல்காந்தி, முதல்வர் விஜய் இருவரும் ஒரே காரில் பயணித்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினர்.

இருவரது சந்திப்பு தொடர்பான வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனி பங்குதாரராக உள்ள Cafe-இல் ராகுல்காந்தியுடன் காபி குடித்த முதலமைச்சர் விஜய்யை காண பொதுமக்கள் குவிந்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved