news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அதிரடி கைது, மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தலைவர்கள் கைது, அதிர்ச்சி
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுப்புக் காவலில் அடைத்து உள்ளது.

ஆனால், தேசத் துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார்
இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

சதி அம்பலம்...
S I Rக்குப் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனியும் அதை மறைக்க முடியாது. டெல்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணைய சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது.

தமிழ்நாட்டிலும்...
ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் ஒன்றிய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்? இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள மூடர்கூடத் த.வெ.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக, SIRக்கு எதிராகவும் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

விசாரணையை எதிர் கொள்ள வேண்டும்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். S I R நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link

"டெல்லி அறிவிக்காத அடிமை முதலமைச்சர்" என உதயநிதி கடும் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உதயநிதிக்கு செக் வைக்கும் கனிமொழி? கனிமொழி அணிக்கு தாவும் சீனியர்கள்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved