Also Watch
Read this
By: Manigandan Raja

சௌரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா மீது வழக்கு பதிந்தனர்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோர் மீது டெல்லி போலீஸார் FIR பதிவு செய்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த ஜந்தர் மந்தர் கேட்டுகள் மீது ஏறிக் குதித்து உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயற்சி?

மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜியை பெண் ஒருவர் கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் அவரது வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் துர்கா பூஜையை தொடங்கி வைப்பதற்காத வந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து சிறார்கள் உட்பட 13 பேர் பலி
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹாஜிபூர் மாவட்டத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வுக்கு பிந்தைய விருந்தில் கலந்துகொண்டு விட்டு சுமார் 20 பேர் படகு மூலம் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆற்றின் மைய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved