news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

திறப்பதிலா பெருமை? உருவாக்குவதில் தான் பெருமை என மு.க.ஸ்டாலின் பதிவு

"எதிரிகள் அஞ்சும் நான் முதல்வன் திட்டம்"

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
"எதிரிகள் அஞ்சும் நான் முதல்வன் திட்டம்"

கோவையில், பெரியார் அறிவுலகம் திறக்கப்படும் நாளில் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். யார் திறந்தால் என்ன, திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை என்றும் பதிவிட்டுள்ளார்.

உள்ளங்கையால் உதயசூரியனை மறைக்க முயல்வதைப் போல், பெரியார் அறிவுலகத்தின் கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்துத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். முதலமைச்சரான பின்பும் கூட, ‘முதல்வன்‘ என்ற சொல்லைக் கண்டால் ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.

கோவையில் பெரியார் அறிவுலகம்
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தமிழினத்தின் மேன்மைக்காக தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் கோவையில் திறக்கப்படுகிறது, மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது.

6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.

யார் திறந்தால் என்ன?
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது,” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை. தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.

நான் முதல்வன் பெயர் மறைப்பு
உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள ’நான் முதல்வன்’ பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம்.

தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி.

அறிவுலகக் கதவு திறக்கட்டும்
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும், அறியாமை ஒழியட்டும், வாழ்க பெரியார்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெரியாா் அறிவுலகம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved