Also Watch
Read this
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வா் விஜய் இன்று அக்டோபர் 16ஆம் தேதி திறந்துவைத்தார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்ற முதல்வர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரும் வழியில் திறந்த வேனில் நின்றபடி முதல்வர் விஜய் மக்களை சந்தித்தார்.

தொடர்ந்து, காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தை திறந்துவைத்துள்ள முதல்வர் விஜய்,

அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரியார் சிலை திறந்து வைப்பு
பெரியாா் அறிவுலகத்தின் நுழைவுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் கம்பீரமான சிலையை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

முதல் கையெழுத்து
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து வருகை பதிவேட்டில் முதல் கையெழுத்தாக தனது கையெழுத்தை பதிவிட்டார்.

மழலையோடு மழலையாக...
பெரியார் அறிவுலகத்தின் 2ஆவது தளத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் மற்றும் சுய வாசிப்புப் பிரிவில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசி, முதல்வர் விஜய் மகிழ்ந்தார்.

தொடங்கி வைத்த முதல்வர்
கோவையில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 89 திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தாா்.
ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அடேங்கப்பா, இவ்வளவு வசதிகளா?
கோவை பெரியார் அறிவுலகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், e-books உள்ளன.
அதிநவீன கணினி, தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகப் பிரிவும் உள்ளது.
2ஆவது தளத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் மற்றும் சுய வாசிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தனித்துவ நூலக வசதி உள்ளது.
உயர் கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக படிப்பகப் பிரிவுகளும் உள்ளன.

நூலகத்தில் விண்வெளி மையம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் மாணவர்கள் அறிவியலை புத்தகத்தில் படிக்காமல், நேரடியாகக் கற்று உணரும் வகையில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி குறித்த வியக்கத்தக்க அனுபவங்களை நேரடியாக வழங்கும் அதிநவீன கோளரங்கமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விண்வெளியில் பயணிப்பது போன்ற பிரத்யேக மெய்நிகர் அனுபவத்தைத் தரும் Space Lift தொழில்நுட்பமும் உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved