news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியாவின் அம்ருதா பூஜாரி அபார வெற்றி

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அம்ருதா பூஜாரி

இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றார்

  • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அம்ருதா வெள்ளிப்பதக்கம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரீஸ்டைல் போட்டியின் 72 கிலோ பிரிவில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
  • இறுதிப்போட்டியில் உக்ரைனின் இரினா சப்லோட்ஸ்காவை எதிர்கொண்ட அம்ருதா, 0–6 என தோற்க வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த தொடரில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கம் வென்றது.

வங்கதேசம், ஆப்கன், ஜிம்பாப்வே முத்தரப்பு ஒருநாள் தொடர்

  • முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
  • பிரெண்டன் டெய்லர் 81 ரன்களும், எர்வின் 93 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 272 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் அபாரம்

  • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் சக நாட்டை சேர்ந்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதிய அவர் 7-க்கு 5, 6-க்கு1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
  • மற்றொரு அரையிறுதில் பிரிட்டனின் சோனே கர்தால் 7-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Related Link
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved