இந்தியா - மேற்கிந்திய தீவுகள்இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் கூட்டாக கோப்பை வழங்கப்பட்டது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றிபெற்று 2-க்கு 2 என சமனில் இருந்தன. இந்த சூழலில், 5-வது போட்டி, மழையால் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய இந்தியா 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
உலக ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியா அபாரம்
உலக ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவின் விஷ்ணு பிரசாத் தங்கமும், லோனாத் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். பராகுவேயில் நடைபெற்ற ஜூனியர் ஆண்களுக்கான ஒன் லாப் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில், 44 பேர் பங்கேற்றதில் விஷ்ணு பிரசாத், ஆர்.ஏ.லோனாத் ஆகியோர் முறையே முதல் 2 இடங்களையும் பிடித்தனர்.
விஷ்ணு, 00.30.394 விநாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். 0.025 விநாடி பின்தங்கிய லோனாத், 2-வது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.