எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, தலைக்குப் பின்னால் கைகளை வைத்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டபடி ஹாயாக படுத்திருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைக்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர், அதன் கூல் போஸை பார்த்து ஆச்சரியமடைந்து, அதனை படம்பிடித்து இராஜ தோரணை என குறிப்பிட்டு பதிவிட்டார்.
அனுமதியற்ற பாதையில் சென்ற எண்ணெய் கப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற பாதையில் சென்ற எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்ததாக ஈரானின் புரட்சிகர காவலர்படை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் நீரிணையின் அனுமதியற்ற தெற்குப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், தனது இருப்பிடத்தைக் கண்டறியும் மற்றும் வழிகாட்டும் அமைப்புகளை அது செயலிழக்கச் செய்துவிட்டு அமெரிக்காவின் ஆதரவோடு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்றதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.