Also Watch
Read this
மதுராந்தகம், தாராபுரம் மாதிரி சாதாரணமா நினைச்சுடாதீங்க, பெருந்துறை இடைத்தேர்தல் பெரிய சவாலா இருக்கும், அந்த தொகுதியில இரட்டை இலையைத் தவிர வேறெதுக்கும் ஓட்டு விழாதுன்னு செங்கோட்டையன் பேசுனது ஆளும்கட்சியில பீதிய கிளப்பியிருக்காம்.
காலியா இருக்கற தொகுதிகளுக்கு விரைவுல இடைத்தேர்தல் நடக்கும்னு எதிர்பார்க்கப்படுற நிலையில பெருந்துறை இடைத்தேர்தல் வேலைகளை தவெக ஆரம்பிச்சிருக்கு.
எடப்பாடியும் தன்னோட நேரடி கண்காணிப்புல பெருந்துறை இடைத்தேர்தல் வேலைகளை பார்க்கத் துவங்கிட்டாராம். இங்க அதிமுக சார்பா நின்னு ஜெயிச்சு ராஜினாமா செஞ்சுட்டு தவெகவுல இணைஞ்சிருக்கற ஜெயக்குமார்தான் ஆளும்கட்சியோட வேட்பாளர்ங்கறது முடிவாகியிருக்காம்.

தொகுதியில நடந்த ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்ட அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமாரை பெருந்துறை தவெக வேட்பாளரேன்னு அழைச்சு அதை உறுதிப்படுத்தியிருக்காரு.
அதே சமயம், பெருந்துறையில பரவலா அரசு நலத்திட்ட விழாக்களை ஏற்பாடு செஞ்சு செங்கோட்டையன் கலந்துகிட்டு வர்றாராம்.

ஒரு கட்சி நிகழ்ச்சியில பேசுன செங்கோட்டையன், ’மதுராந்தகம், தாராபுரம் மாதிரி பெருந்துறைய ஈஸியா நெனைச்சுடாதீங்க, அந்த ரெண்டு தொகுதிகள்ல திமுக அதிமுகன்னு மாறி மாறி எம்.எல்.ஏ. வந்திருக்காங்க, ஆனா எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிச்சதுல இருந்து பெருந்துறையில அண்ணா திமுக மட்டும்தான் ஜெயிச்சிருக்கு. பெருந்துறைக்காரங்க ரெட்டை இலைக்கு மட்டும்தான் ஓட்டுப் போடுவாங்க, அவங்களை மாத்துறது ரொம்ப கஷ்டம், அதனால ரொம்ப கடுமையா உழைச்சா மட்டும்தான் ஜெயிக்க முடியும்’னு பேசியிருக்காரு.

பெருந்துறையில எம்.ஜி.ஆர். காலத்துல இருந்து ஜெயிச்ச அதிமுகவை தோற்க விடக் கூடாதுன்னு எடப்பாடியும் களம் இறங்கியிருக்கறாராம்.

இங்க செல்வாக்கா இருக்கற தோப்பு வெங்கடாச்சலம் களம் இறக்கப்படலாம்னு ஒரு பேச்சு ஓடிட்டிருக்காம். திமுகவுல இருந்து விலகுன வெங்கடாச்சலம், விரைவுல அதிமுகவுல சேரப்போறதாவும், அவரையே இபிஎஸ் களம் இறக்குவாருன்னும் கொங்குமண்டலத்துல பேசிக்கறாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved