Also Watch
Read this
மாபெரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக முன்னாள் நிர்வாகி கைதான பின்பும், முதலமைச்சர் விஜய் மவுனமாக இருப்பது ஏன்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடினார் ரீல்ஸ் முதல்வர்? என்றும் இபிஎஸ் விமர்சித்து உள்ளார்.

பதில் சொல்லாமல் மவுனம்
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;
தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?
18.10.2026 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” என்று கூறியுள்ளது. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?
இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் Network ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மவுன சாமியாராகவே...
ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, Atleast ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த Walter White Behaviour குறித்து ஜோசப் விஜய் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்க்கட்சி பேசும் போது, எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.
கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான Pseudoephederine என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, Fully processed Meth Crystalகளே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.

யாருக்காக...?
ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?
இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.
அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?

தமிழ்நாடு முதல்வர் அவர்களே...
For Your Information, இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் DRI அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved