news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நடிகர் டைகர் ஷெராப்புக்கு குறி, 28 வருட பகை

பிஷ்னோய் கேங் ஆடியோவால் அலறும் மும்பை

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகரும், பாடகருமான டைகர் ஷெராஃப்-ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொ* செய்ய முயன்ற சம்பவம் மும்பையை அலற வைத்துள்ளது.

கடைசி நேரத்தில் துப்பாக்கி ஜாம் ஆனதால் நடிகர் டைகர் ஷெராப் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், கொடூர கொ* முயற்சிக்கு பின்னணியில் பிஷ்னோய் கும்பல் மூளையாக இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப்...
பிகில், ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் தான் டைகர் ஷெராப். பாலிவுட் நடிகரும், பாடகருமான டைகர் ஷெராப், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை மாலை கால்பந்து விளையாட ஜூஹூ பகுதிக்கு சென்றிருக்கிறார்.

நூலிழையில்...
விளையாடி முடித்து விட்டு புறப்படும் போது, டைகர் ஷெராப்பின் பிஎம்டபுள்யூ கார் நோக்கி வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கியது.

சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் டைகர் ஷெராப் கார் கண்ணாடி கதவை துளைத்துக் கொண்டு சென்றது. இதில், ஓட்டுநருக்கு குண்டடிபட்ட நிலையில், டைகர் ஷெராப் நூலிழையில் உயிர் தப்பினார்.

இருப்பினும், துப்பாக்கி குண்டுகள் பட்டு சிதறிய காரின் கண்ணாடித் துண்டுகள் தெறித்து கையிலும், மார்பிலும் டைகர் ஷெராப்புக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே மர்ம கும்பல் டைகர் ஷெராப் கார் நோக்கி நெருங்கி வந்தது.

குறி தப்பிய நிலையில்...
மர்ம கும்பலில் ஒருவன் காருக்கு மிக அருகே வந்து டைகர் ஷெராப் நோக்கி துப்பாக்கியை காட்டி குறி வைத்தான். ஆனால், துப்பாக்கி ஜாம் ஆனதால் குறி தப்பிய நிலையில், மர்ம கும்பல் தப்பியோடியது. ஓட்டுநர் குண்டடிபட்டு துடித்துக் கொண்டிருந்ததால் சினிமாவில் பார்ப்பது போல ரத்தக் காயங்களுடன் காரை இயக்கிய டைகர் ஷெராப், நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

தீவிர விசாரணை
முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரும் மஞ்சள் நிற பல்சர் பைக்கில் வந்தது தெரியவந்த நிலையில், அந்த பைக்கை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்திய கும்பல், ஜூஹூ பகுதியில் இருந்து அந்தேரி பகுதிக்கு தப்பியோடியிருக்கிறது.

சிசிடிவி காட்சியில்...
நம்பர் பிளேட் வைத்து நடத்திய விசாரணையில் பைக் மூன்று கை மாறியது தெரியவந்துள்ளது. ஜூஹூ பகுதியில் இருந்து அந்தேரிக்கு தப்பியோடிய அந்த கும்பல், அங்கிருந்து ரயில் மூலம் தப்பியோடியிருக்கிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மும்பையில் இருந்து வெளியூருக்கு புறப்படும் ரயில்கள், பேருந்துகளில் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

பிஷ்னோய் கும்பல்
கைது செய்யப்பட்ட கும்பலுக்கு பின்னணியில் பிஷ்னோய் கும்பல் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், டைகர் ஷெராப் மீதான கொ* முயற்சிக்கு பொறுப்பேற்று பிஷ்னோய் கும்பலின் கேங்க்ஸ்டரான அனில் பண்டிட் என்பவன் வெளியிட்டுள்ள ஆடியோ நடுநடுங்க வைத்துள்ளது.

சல்மான்கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் டைகர் ஷெராப்புக்கு குறி வைத்ததாக கூறியுள்ள பிஷ்னோய் கும்பல், பல முறை சொல்லி பார்த்தும் காது கொடுத்து கேட்காததால், துப்பாக்கிச்சூடு மூலம் வார்னிங் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது.

வட இந்தியா டூ அமெரிக்கா
வட இந்தியாவை கட்டுக்குள் வைத்துக் கொண்டு மிரட்டி வரும் நம்பர் ஒன் கேங்க்ஸ்டர் குரூப் தான் பிஷ்னோய் கும்பல். இந்த கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருக்க, லாரன்ஸ் பிஷ்னோயின் வலது கரமாக இருக்கும் அனில் பண்டிட் என்பவன் தான் டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்.

அமெரிக்காவில் ஒளிந்துக் கொண்டு, இந்திய போலீசுக்கு தண்ணீ காட்டி வருபவன் தான் அணில் பண்டிட். ஹரியானா மாநிலம் பாணிபட் தான் அணில் பண்டிட்டின் சொந்த ஊர். கனடா, தாய்லாந்து, துபாய், அமெரிக்கா வரை பிஷ்னோய் கும்பலின் கிரிமினல் நெட்வொர்க்கை டீல் செய்வது அணில் பண்டிட் தான்.

இந்திய போலீஸ் விசாரணை
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து கொண்டு இந்தியாவில் தனது ஆட்களை வைத்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் பிஷ்னோய் கும்பலின் அணில் பண்டிட்டை ஏற்கனவே இந்திய போலீஸ் வாண்டடு லிஸ்டில் வைத்திருந்தது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அணில் பண்டிட் அமெரிக்க போலீசில் சிக்கினான்.

தற்போது பாலிவுட் பிரபலமான டைகர் ஷெராப் மீதான தாக்குதலிலும் அணில் பண்டிட் தான் ஆடியோ வெளியிட்டிருக்கிறான் என்ற நிலையில், இந்திய போலீசின் ENQUIRY அமெரிக்கா வரை சென்றிருக்கிறது.

கால் நூற்றாண்டு பகை
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும், பிஷ்னோய் கும்பலுக்கும் இருப்பது கால் நூற்றாண்டு காலமாக தீராத பகை. 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சூட்டிங்கின் போது,இரண்டு மான்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சல்மான்கான் பெயரும் சிக்கியது. அன்று முதல் இன்று வரை பிஷ்னோய் கும்பலின் பரம எதிரியே சல்மான்கான் தான்.

காரணம்... பிஷ்னோய் சமூகத்தின் வழிபாட்டு விலங்கு மான்.

தங்கள் சமூக வழிபாட்டு விலங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சல்மான்கானுக்கு பல ஆண்டுகளாக பிஷ்னோய் கும்பல் கொ* மிரட்டல் விடுத்து வருகிறது. 2018ஆம் ஆண்டு முதன்முதலில் சல்மான்கானை கொ* செய்வோம் என ஊடகங்களுக்கே பேட்டி கொடுத்தது பிஷ்னோய் கும்பல்.

சல்மான்கான் தான் இலக்கு
அதற்கு பிறகு 2022ஆம் ஆண்டு பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா போல சுட்டுக் கொ* செய்யப்படுவார் என கடிதம் மூலம் வார்னிங் கொடுத்தது. 2024ஆம் ஆண்டு சல்மான்கானின் பந்த்ரா வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சர்வதேச கேங்க்ஸ்டர் கும்பலான பிஷ்னோயின் முதல் டார்கெட் சல்மான்கான் தான்.

தற்போதும், சல்மான்கான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வீட்டில் இருக்கும் நாயை கூட விட்டு வைக்க மாட்டோம் என பகிரங்கமாக மிரட்டியிருக்கிறது பிஷ்னோய் கும்பல்.

சல்மான்கான் மீதிருந்த பகையை தீர்த்துக் கொள்ள நடிகர் டைகர் ஷெராப் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் பிஷ்னோய் கும்பல் மூலம் மும்பை போலீசுக்கு பெரும் தலைவலியே உருவாகியிருக்கிறது. சல்மான்கானுடன் தொடர்பில் இருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கும் பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Related Link
அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்

அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மரணத்தைப் பற்றி பேசிய போதகருக்கு, நேரலையில் நிகழ்ந்த சோகம்

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved