news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்
tv

Also Watch

அடுத்தடுத்து 7 மர்ம மரணங்கள், ரூ.200 கோடி சாம்ராஜ்யம்

பிரைன் மேப்பிங் சோதனையில் சிக்கிய கொடூரன்

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேரளத்தில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பரம்பரை சொத்துக்களை அபகரிப்பதற்காக, அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் 7 பேரை காவு வாங்கியதோடு, கடைசியாக எஞ்சியிருந்த வாரிசும் மரக்கட்டையால் அடித்து கொ* செய்யப்பட்ட சம்பவம் திடுக்கிட வைத்திருக்கிறது. பிரைன் மேப்பிங் சோதனையில் வெளிவந்துள்ள கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடைசி வாரிசின் மரணமும் கிரிமினல் மூளையும்

கேரளம் மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் உள்ளது கூடத்தில் தறவாடு எனப்படும் உமா மந்திரம் வீடு. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரியமான கேரள நாலுகெட்டு ஓட்டுவீடு, சுமார் 16 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அதோடு, திருவனந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு சொத்துகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்த இந்த பாரம்பரிய குடும்பத்தில் தான் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஏழு மரணங்கள்...
கடந்த 1991ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த குடும்பத்தை சேர்ந்த அடுத்தடுத்த வாரிசுகள் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

சொத்துகளுக்கு வாரிசுகளாக இருந்த கோபிநாத், அவரது மனைவி சுமுகியம்மா, இவர்களது பிள்ளைகளான ஜெயபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஜெயஸ்ரீ, கோபிநாத்தின் சகோதரர் வேலுப்பிள்ளை, அவரது மகன் உன்னிகிருஷ்ணன் என அந்த குடும்பத்தில் அனைவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

கடைசி வாரிசு மரணம்
இந்த தொடர் மரணங்களில், குடும்பத்தின் கடைசி வாரிசான ஜெயமாதவன், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க, அவரது பிரேத பரிசோதனை அறிக்கையிலோ மரணத்திற்கான காரணம் மர்மமாகவே மறைக்கப்பட்டிருந்தது.

கை மாறிய சொத்துக்கள்
இந்த சூழலில்தான், குடும்பத்தின் சொத்துகளை பராமரித்து வந்த ரவீந்திரன் மீது பலத்த சந்தேகம் எழுந்தது. ஜெயமாதவன் உள்ளிட்ட 7 பேரின் மரணத்திற்கு பிறகு, பல கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்துகள் அனைத்தும் தான செட்டில்மென்ட் மற்றும் உயில் மூலம் ரவீந்திரனின் பெயரிலும், அவரது கூட்டாளிகள் பெயரிலும் அதிரடியாக மாறியது.

இதை தொடர்ந்து, உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

களமிறங்கிய காவல்துறை
காவல்துறை களத்தில் இறங்கிய போது தான், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஜெயமாதவனின் வீட்டில் இருந்த கட்டிலிலும், மரக்கட்டையிலும் ரத்தக்கறை படிந்திருந்தது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கோழிக்கோடு என்.ஐ.டி. பயோ மெக்கானிக்ஸ் துறை நடத்திய ஆய்வில், அவரது தலையில் ஏற்பட்ட காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டது அல்ல, மாறாக, மரக்கட்டையால் தாக்கப்பட்டு, மூச்சு திணறடித்து திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமானது.

மேலும், ஜெயமாதவனின் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றுவதற்காக ரவீந்திரன் தயாரித்த உயிலில் உள்ள கையெழுத்து போலி என்பதும் தடயவியல் ஆய்வில் அம்பலமானது. ஒருவேளை, ஜெயமாதவனுக்கு திருமணம் நடந்துவிட்டால், தான் போலி உயில் மூலம் அபகரித்த சொத்துகளுக்கு வேறு வாரிசுகள் வந்துவிடுவார்கள் என்ற உச்சகட்ட பயத்தில்தான் ரவீந்திரன் அவரை கொடூரமாக கொன்றுள்ளார்.

அதி நவீன பரிசோதனை மூலம்...
இந்த வழக்கில் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, ரவீந்திரனுக்கு அதிநவீன பிரைன் எலக்ட்ரிக்கல் ஆஸிலேஷன் சிக்னேச்சர் ப்ரொஃபைலிங் எனப்படும் பிரைன் மேப்பிங் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், குற்றவாளி அவர் வாயாலேயே நடந்த உண்மைகள் அனைத்தையும் கக்கியுள்ளார்.

இதையடுத்து, திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் அருண் ஆர்.பி.கிருஷ்ணா உத்தரவின் பேரில், தனிப்படையினர் ரவீந்திரனை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், இந்த சதி செயலுக்கு உடந்தையாக இருந்த முன்னாள் நீதிமன்ற ஊழியரும், ரவீந்திரனின் நண்பருமான அனில்குமார், கார் ஓட்டுநர் சஜு ஆகியோரையும் போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர்.

200 கோடி ரூபாய் சொத்துக்காக 7 உயிர்களைப் காவு வாங்கிய இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Link
வழக்கறிஞர் வீட்டில் புகுந்து கொள்ளை, கூலிப்படையாக அவதாரம் எடுத்த காக்கி சீருடை

வழக்கறிஞர் வீட்டில் புகுந்து கொள்ளை, கூலிப்படையாக அவதாரம் எடுத்த காக்கி சீருடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐந்து நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved