news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

டோட்லா பாலில் சோப்பு பவுடர்? விற்பனையை தடுக்காதது ஏன்?

கண்ணை மூடிக்கொண்ட பாதுகாப்புத்துறை?

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டோட்லா பாக்கெட் பால் குடிப்பதற்கு தகுதியற்றது என FSSAI அதிர்ச்சி தகவலை தெரிவித்த நிலையில், தமிழ்நாடு முழுக்க தங்கு தடையின்றி விற்பனை நடைபெற்று வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு விற்கப்படும் பால் பாக்கெட்டுகளிலும் காலாவதி தேதி இடம்பெறாமல் விற்பது, வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஊட்டச்சத்து தருமா?
உடலுக்கு ஊட்டச்சத்தை அள்ளித் தரும் என நம்பி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பருகி வந்த டோட்லா பாலில், உயிருக்கே உலை வைக்கும் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களுக்கு தொடர்ந்து விற்கப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

11 மாநிலங்களில்...
தெலங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட டோட்லா Dodla நிறுவனத்தின் பாக்கெட் பால் இந்தியாவின் 11 மாநிலங்களில் விற்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில், திண்டுக்கல் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் டோட்லாவின் தயாரிப்பு நிறுவனம் செயல்படும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் வத்தலகுண்டு தயாரிப்பு பகுதியிலிருந்து பெறப்பட்ட பாக்கெட் பாலை ஆய்வுக்கு உட்படுத்திய FSSAI, அந்த பால் பருகுவதற்கே தகுதியற்றது என தெரிவித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நச்சுவேதிப் பொருட்கள்
இதனையடுத்து, நிறுவனத்தின் மேல்முறையீட்டை தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாலில் டிடர்ஜென்ட், காஸ்டிக் சோடா போன்ற நச்சுவேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதோடு அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்த போதும் கூட விற்பனை குறைந்தபாடில்லை.

இதுநாள் வரை டோட்லா பாலை அருந்தியவர்களுக்கே என்ன உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் என தெரியாத பட்சத்தில், அப்பாலை தடை செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவரம் இல்லாத பால்
இந்நிலையில், டோட்லா பால் பாக்கெட்டில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் விலை உள்ளிட்ட எந்தவித விபரமும் இல்லாமல் விற்கப்பட்டு வருவது பயனாளிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மக்களின் உயிரோடும், ஆரோக்கியத்தோடும் விளையாடும் அபாயகரமான விவகாரம் குறித்து தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மத்திய உணவு பாதுகாப்புத்துறையும், தமிழக உணவு பாதுகாப்புத்துறையும் சுணக்கம் காட்டுவதற்கான காரணம் என்னவென்று வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அலட்சியமாக பதில்
இதுகுறித்து திண்டுக்கல் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லையென அலட்சியமாக அதிகாரிகள் பதிலளிப்பதாக வாடிக்கையாளர் ரதீஷ் பாண்டியன் கூறினார்.

ஆயுத பூஜையை ஒட்டி தொடர் விடுமுறைக்கு பின்னரே நடவடிக்கை எடுப்போம் என அதிகாரி கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


நடவடிக்கை பாயுமா?
சாமானிய மக்கள் சிறு தவறு செய்தாலும் கூட வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, டோட்லா போன்ற பெரு நிறுவனங்கள் செய்யும் தவறை மூடி மறைப்பதாக மாதவன் குற்றம் சாட்டினார்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Link
தென் மாவட்ட ரத்த வரலாறு, ரவுடிகளுக்கு தூபமிடும்

தென் மாவட்ட ரத்த வரலாறு, ரவுடிகளுக்கு தூபமிடும் "இன்ஸ்டா"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved