news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பிரான்ஸ் முதல் ஜெர்மனி வரை ரணகளம், அமெரிக்க அதிபருக்கு சிக்கலா? வாய்ப்பா?

9 நாடுகளை உலுக்கும் 'இளைஞர் படை' அரபு வசந்தம் 2.0?

50

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சொர்க்கபுரி என்று கொண்டாடப்படும் ஐரோப்பாவின் 9 முக்கிய நாடுகளில், ஒரே நேரத்தில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, உலக அரசியலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மக்கள் புரட்சி அடுத்த அரபு வசந்தமா? என்ற கேள்வி ஒருபுறம் எழ, மறுபுறம், வரவிருக்கும் அமெரிக்க இடைக்கால தேர்தலில், இது டிரம்பிற்கு சாதகமா? அல்லது சவாலா? என்ற புதிய கணக்கையும் உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில்...
ஐரோப்பா என்றாலே நம் நினைவுக்கு வருவது பளபளக்கும் நவீன நகரங்கள், சீரான வளர்ச்சி, செல்வ செழிப்பு, ஆடம்பரமான வாழ்க்கை முறை தான். உலக நாடுகளின் கண்களுக்கு சொர்க்கபுரியாக காட்சியளித்த, அதே ஐரோப்பிய கண்டத்தின் வீதிகளில், தற்போது மக்கள் கொதித்தெழுந்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம் என ஒரே நேரத்தில் 9 ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கி அரசாங்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்துவருவது சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டங்கள் வன்முறையாக...
பல இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி கடையடைப்புகளும், தடியடிகளுமாக ரத்தக்களறியாக உருவெடுத்துள்ளன.

ஐரோப்பாவில் திடீரென என்னதான் நடக்கிறது? இது இன்னொரு அரபு வசந்தத்தின் தொடக்கமா? என்ற கேள்வி உலகரங்கில் எழுந்திருக்கிறது.

ஒன்பது நாடுகளில்...
இந்த 9 நாடுகளிலும், ஒரே நேரத்தில் மக்கள் திரண்டெழுந்து போராட என்ன காரணம்? என்று அலசி பார்த்தால், ஒவ்வொரு ஊரிலும் பிரச்னைகள் வெவ்வேறு ரூபத்தில் அச்சுறுத்துவது தெரியவந்திருக்கிறது.

பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் கல்வித்துறைக்கான நிதி, வகுப்பறை கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகளுக்கு எதிராக மாணவர்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.

ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் வானத்தை முட்டும் வீட்டு வாடகை உயர்வு, சாமானிய மக்கள் சொந்தமாக வீடு வாங்க முடியாத அவலநிலை ஆகியவை மக்களை வீதிக்கு கொண்டுவந்துள்ளன.

87 வயது மூதாட்டி ஒருவர் வாடகை கட்ட முடியாமல் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இறந்த சம்பவம் ஸ்பெயினையே உலுக்கியிருக்கிறது.

இத்தாலியில் தாங்க முடியாத வாழ்க்கை செலவு, வேலையின்மை கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஜெர்மனியில் கட்டாய ராணுவ சேவை திட்டத்துக்கு எதிராகவும், அல்பேனியாவில் ஆளும் வர்க்கத்தின் ஊழல், வேலையின்மைக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

எதிர்காலத்தை நோக்கி...
நாடு வேறாக இருந்தாலும், எங்கள் பிரச்னைகளுக்கு அரசாங்கம் எப்போது தீர்வு காணப்போகிறது, எங்கள் எதிர்காலம் என்னவாக போகிறது? என்ற ஒரே கேள்வியைத்தான் எழுப்புகின்றனர் இளைஞர்கள்.

2010ல் அரபு வசந்தம்...
இந்த காட்சிகள், அப்படியே 2010ம் ஆண்டு துனிசியாவில் தொடங்கி மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளை புயலாக சுழன்றடித்த அராப் ஸ்பிரிங் எனப்படும் அரபு வசந்தத்தை நினைவூட்டுகின்றன. அன்று ஊழல், வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்ததில், பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகார ஆட்சியாளர்களே பதவியை இழந்து ஓடினார்கள்.

தற்போது, ஐரோப்பாவிலும் அதே பாணியில் மக்கள் போராடுவதால், இதுவும் அப்படியொரு பெரிய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்குமா?என்ற காரசார விவாதம் கிளம்பியுள்ளது.

ஆனால், அன்றைய அரபு நாடுகளின் அக்மார்க் சர்வாதிகார அரசியல் சூழலும், இன்றைய ஐரோப்பிய ஜனநாயக அமைப்புகளின் சூழலும் ஒன்றல்ல. அதனால், இந்த போராட்டங்கள் உடனடியாக ஐரோப்பிய அரசாங்கங்களை வீழ்த்திவிடும் என்று முடிவெடுத்துவிட முடியாது என்றாலும், ஆட்சியாளர்களுக்கு இது பேரதிர்ச்சிதான்.

இங்கேதான் சர்வதேச அரசியலின் ட்விஸ்ட் தொடங்குகிறது.

அரசியல் ஆயுதமாக... டிரம்ப்...
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி மிக முக்கியமான இடைக்கால தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது குடியரசு கட்சியின் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்வது டிரம்புக்கு மிகப்பெரிய சவால்.

இந்த சூழலில், பிரான்ஸ், ஐரோப்பிய வீதிகளில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, ’பார்த்தீர்களா, கட்டுப்பாடற்ற குடியேற்ற கொள்கைகளால் தான் ஐரோப்பாவே தீப்பற்றி எரிகிறது,’ என்று தனது குடியேற்ற எதிர்ப்பு பிரசாரத்தை கடுமையாக்க, டிரம்ப் தரப்பு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது.

தேர்தலில் டிரம்ப் வாதம்
ஆனால், ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் கல்வித்துறை சீரழிவு, வீடற்ற நிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகள் தான் முதன்மையான காரணங்கள். இதேபோன்ற, பொருளாதார கவலைகளும், பணவீக்கமும் அமெரிக்க வாக்காளர்களிடையேயும் நெருப்பாக புகைந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஐரோப்பிய கலவரங்களை முன்வைத்து குடியேற்றம், பாதுகாப்பு என்ற வாதங்களால் டிரம்ப் தனது தேர்தல் பலத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம்.

வாய்ப்பா, சவாலா?
அதே நேரத்தில், இந்த போராட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள பொருளாதார அதிருப்தி என்ற விவாதம் அமெரிக்காவிலும் தீவிரமடைந்தால் அது ஆளுங்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மக்களின் வாழ்க்கை செலவு குறையவில்லை, அடிப்படை தேவைகளை சமாளிப்பது கடினமாக இருக்கிறது என்ற உணர்வு நீடித்தால், அது வாக்குச்சாவடியில் ஆளும் தரப்பிற்கு எதிரான அலையாக மாறக்கூடும்.

இதனிடையே போராட்டங்கள் நடைபெறும் பெரும்பாலான நாடுகள், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான தலைவர்களால் ஆளப்படுபவை. வெளிநாட்டு அரசுகளை வீழ்த்த அமெரிக்க போராட்டங்களை ஒரு கருவியாக்கும் என்ற கருத்தையும் பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.

Related Link
பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved