கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் முடிவு
மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் 17 நாட்களாக நடத்திய உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டனர். 5 மாணவர்களை இடைநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீஸ்
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 12 துப்பாக்கிகள், ஆயிரத்து 95 தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களையும் மீட்டனர்.