Also Watch
Read this

ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய போட்டியில், வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் பேட்மிண்டன் வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
வீராங்கனை நித்ய ஶ்ரீ சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இளம் தலைமுறையினருக்கு...
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது.
வீராங்கனை நித்ய ஶ்ரீ , வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.

பேட்மிண்டன் விளையாட்டில்...
பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ்-க்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீராங்கனை மனிஷா ராமதாஸ் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்க...
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.
அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved