news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

உட்கட்சி தேர்தலில் மோதும் உதயநிதி-கனிமொழி

தவெக அமைச்சர் ஆதரவில் ஜெயிலர் 2 - 24/7

52

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவுல உட்கட்சி தேர்தல் நடத்துறதுல கனிமொழிக்கும், உதயநிதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்காம். இதுல கனிமொழி பக்கம்தான் ஆதரவு அதிகமா இருக்கறதா அறிவாலயத்துல பேசிக்கறாங்க.

உட்கட்சி தேர்தல் நடத்தித்தான் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கணும், இனி சிபாரிசோட வர்றவங்களுக்கும் தலைமை சொல்றவங்களுக்கும் பதவிகள் கொடுக்கக் கூடாதுங்கறதுல கனிமொழி கறாரா இருக்காராம். இதே நிலைப்பாட்டுலதான் திமுக மேல்மட்டத்துல இருக்கற ஒரு முக்கிய பிரமுகரும் இருக்கறதா சொல்றாங்க.

ஆனால், உதயநிதி தரப்போ சில யதார்த்தமான விவகாரங்களை கட்சித் தலைமை முன்னால எடுத்து வைக்குதாம். மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து மத்த எல்லாத்துக்கும் உட்கட்சி தேர்தல் நடத்துங்க, மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடத்துனா மாவட்ட அளவுல கட்சியில செல்வாக்கா இருக்கற பலபேர் கட்சிய விட்டு போயிடுவாங்க, அவங்களை அரவணைக்க ஆளும்கட்சி தயாரா இருக்குன்னு ஒரு வாதத்தை முன் வைக்குதாம்.

இதுக்கு எதிரா கனிமொழி தரப்போ, நம்ம கட்சியில கீழ் மட்டத்துல இருக்கறவங்களோட கவலையே மாவட்டங்கள்லயும், பல பொறுப்புகள்லயும் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவங்கதான் வரமுடியுதுங்கறது தான். இனிமே இதையெல்லாம் உடைச்சு உட்கட்சி ஜனநாயகத்த காப்பாத்த தேர்தல் நடத்தி நிர்வாகிகளைப் போடுறதுதான் கட்சியோட அஸ்திவாரத்தை இன்னும் பலப்படுத்தும்னு சொல்றாராம்.

ஒரு பக்கம் உட்கட்சி தேர்தல் குழப்பம், இன்னொரு பக்கம் சீரமைப்புக் குழு கொடுத்த பரிந்துரைகள்னு ரெண்டையும் வெச்சுக்கிட்டு பெரும் அழுத்தத்துல இருக்காராம் கட்சித்தலைவர் ஸ்டாலின்.

பசும்பொன் வருகிறார் முதல்வர் விஜய்?

தமிழக காவல்துறையில மிக முக்கியமான பதவிகள் இன்னும் காலியாவே இருக்கு, இந்த பதவிகளுக்கான எதிர்பார்ப்பு ஐபிஎஸ் வட்டாரங்கள்ல எகிறிக்கிட்டிருக்கற நிலையில, தேவர் ஜெயந்திக்கு முன்னால எந்த அறிவிப்பும் வெளியாகாதுன்னு காக்கி வட்டாரங்கள்ல ஒரு தகவல் இருக்கு.

தமிழ்நாடு காவல்துறையில மிக முக்கியமான உயர் பதவிகள் நிரப்பப்படாம இன்னும் காலியாவே இருக்கு. குறிப்பா, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி, சென்னை மாநகர காவல் துறையில தலைமையக கூடுதல் ஆணையர், ரெண்டு இணை ஆணையாளர்கள், தாம்பரம் மாநகர காவல் ஆணையர்னு பல முக்கிய இடங்கள் இன்னும் நிரப்பப்படாம இருக்கு.

இந்த பதவிகளுக்கான அதிகாரிகள் யாருங்கறதை முடிவு செஞ்சுட்டாங்களாம், ஆனா இந்த வருஷத்துக்கான தேவர் ஜெயந்தி இந்த மாதம் 30ம் தேதி வர்ற நிலையில, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கு.

முதல்வரே பசும்பொன்னுக்கு போகலாம்னு எதிர்பார்க்கப்படுற நிலையில, தமிழ்நாடு முழுக்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோட 62வது குருபூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்ல உயர் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுக்கிட்டிருக்காங்களாம். இந்த விழா முடிஞ்சதுக்குப் பிறகு பெரிய டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்டும், புதிய போஸ்டிங்குகளுக்குமான அறிவிப்பும் வெளியாகப் போகுதாம்.

24 மணி நேரமும் ஜெயிலர்-2

ஒரு தியேட்டர்ல மட்டும் ஜெயிலர்-2 படத்தோட காட்சிகள் அரசு அனுமதியையும் தாண்டி நடு ராத்திரி, அதிகாலைன்னு இஷ்டத்துக்கும் திரையிடப்படுதாம், இந்த விதி மீறலுக்கு பின்னால ஒரு அமைச்சரோட பரிபூரண ஆசி இருக்காம்.

தமிழ்நாட்டை ஒட்டி இருக்கற ஒரு அண்டை மாநிலத்தோட எல்லையில இருக்கற ஒரு நகரத்தோட பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் தமிழக அமைச்சர் ஒருத்தரோட கட்டுப்பாட்டுல இருக்காம். இங்க ஜெயிலர்-2 படத்தை திரையிடவே கூடாது, ரணபலி படத்தை மட்டும் போட்டா போதும்னு முதல்ல முடிவெடுக்கப்பட்டுச்சாம்.

ஆனாலும், பேருக்கு ரெண்டு நாளைக்கு மட்டும் ஜெயிலர்-2 படத்தைப் போட்டுக்கோங்கன்னு அந்த அமைச்சர் க்ரீன் சிக்னல் கொடுத்தாராம். ஆனால், வசூல் அள்ளுனதைக் கேள்விப்பட்ட அந்த மாண்புமிகு, வருமானத்துல என்னய்யா கொள்கையெல்லாம் வேண்டிக்கெடக்கு, நீங்க தொடர்ந்துகூட படத்தை ஓட்டி காசை அள்ளுங்கன்னு கட்டளை போட்டாராம்.

குஷியான அந்த திரையரங்கு நிர்வாகம் தொடர் விடுமுறை நாட்கள்ல நடு ரத்திரியில ஒரு ஷோ, அதிகாலையில ஒரு ஷோ, காலையில ஒரு ஷோன்னு 24/7 ஜெயிலர் 2வை ஓட்டி வசூலை அள்ளிக்கிட்டிருக்காம்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி தியேட்டர்ல இவ்வளவு கூட்டம் கூடுறதால ஏதாவது அசம்பாவிதம் நடந்தா யார் பதில் சொல்றதுன்னு லோக்கல் போலீஸ் கவலைப்படுதாம். ஆனா, எந்தக் கவலையும் இல்லாம அந்த தியேட்டர் நிர்வாகம் ரஜினி படம் மூலமா வசூலைக் குவிக்குதாம்.

விடுதலைச்சிறுத்தைகள் திடீர் கோபம்?

தவெக கட்சித் தலைமை மேல குறிப்பா முதல்வர் மேல சிறுத்தைகள் கடும் கோபத்துல இருக்காங்களாம். நம்மளை அவங்க அங்கீகரிக்கவே மாட்டேங்குறாங்க, நாமதான் ரொம்ப கீழ இறங்கிப் போறோம்னு திருமா கிட்ட புகார் செய்றாங்களாம் விசிக நிர்வாகிகள்.

மதுராந்தகம் தொகுதியில தாராபுரத்தை விட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்துல மரகதம் குமரவேல் ஜெயிச்சதுக்கு விஜய்யின் செல்வாக்கு ஒரு காரணம்னும், பாமக மறைமுகமா சப்போர்ட் செஞ்சதும் இன்னொரு காரணம்னும் தவெக வட்டாரத்துலேயே பேசிக்கறது சிறுத்தைகளை ரொம்பவே சீண்டியிருக்காம்.

அந்த தொகுதியில பாமகவை விடவும் அதிகமான வாக்குகளை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகளின் பங்கை தவெகவும், அதன் நிர்வாகிகளும் மதுராந்தகம் வெற்றியில பேசவே மாட்டேங்குறாங்களாம்.

குறிப்பா, முதல்வர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு நன்றி கூட சொல்லாமல், கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்துலயும் பங்கேற்காமல் தவிர்த்தது விசிக தொண்டர்களை உஷ்ணப்படுத்தியிருக்காம்.

கூட்டணிய விட்டு விலகி வந்த திமுகவைப் பத்திதான் இன்னமும் பேசிக்கிட்டிருக்கோம், ஆனா இருக்கற கூட்டணி கட்சியான தவெகவைப்பத்தி இதுவரைக்கும் எந்த விமர்சனத்தையும் வைக்காம ஏன் இருக்கணும்? மதுராந்தகம் வெற்றிக்கு நாமதான் காரணம்னு வெளிப்படையா பேசுனா என்ன தப்பு?ன்னு திருமாவை கேள்வி கேட்குறாங்களாம்.

விரைவிலேயே திருமா இதப் பத்தி வாய் திறப்பாருன்னு சிறுத்தைகள் வட்டாரம் சொல்லுது.

Related Link
தவெகவுக்கு மற்றொரு இடைத்தேர்தல் சவால்

தவெகவுக்கு மற்றொரு இடைத்தேர்தல் சவால்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved