news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பால் இஸ்ரேல் திட்டம் நிறுத்தம்

வான்வழி தாக்குதல் நடத்த திட்டம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ஈரான் மீது மிகக்கடுமையான வான்வழி தாக்குதல் நடத்த திட்டம்

  • அக்டோபர் மாதம் ஈரான் மீது கடுமையான வான்வழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்த்ததால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  • கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதிபர் டிரம்ப் போரை எதிர்த்ததால், திட்டம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானுடனான எல்லையை தேதி குறிப்பிடாமல் மூடிய ஈராக்

  • ஈரானுடனான எல்லையை தேதி குறிப்பிடாமல் ஈராக் அரசு மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஷீப் எனும் நிலம் வாயிலான எல்லையை ஈராக் அதிகாரிகள் மூடியுள்ளதாகவும், இதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரதமர் அலுவலக உத்தரவுப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக்கின் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே, மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி

  • நுரையீரல் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட 71 வயதான போப் லியோ, எட்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வருகை தந்தார். உற்சாகமாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கையசைத்த அவர், குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். மேலும் தனது உடல்நலம் மீள வேண்டிப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


Related Link
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குற்றச்சாட்டு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved