Also Watch
Read this
By: Manigandan Raja

முழுக்க முழுக்க Made in india
இத்தாலியை சேர்ந்த Piaggio நிறுவனம் 2027-க்குள் Commuter Scooter-களை இந்தியாவிலேயே தயாரித்து முழுக்க முழுக்க மேட் இன் இந்தியா தயாரிப்பாக விற்பனை செய்யத் திட்டம் இந்திய சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ஸ்கூட்டர்களில் 110cc முதல் 125cc வரையிலான பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Royal Enfield நிறுவனத்தின் வருவாய்
Royal Enfield நிறுவனத்தின் வருவாய் முதல்முறையாக ரூ.1000 கோடியை கடந்து, இந்த ஆண்டு ஒட்டுமொத்த வருவாயில் 15% வரை உயர்ந்துள்ளதாகத் தகவல் அதேவேளையில், ஆசியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனச் சந்தைகளில் ஒன்றான இந்தோனேசியாவில் புதிய உற்பத்தித் திட்டத்தைத் தொடங்குவது குறித்தும் இந்நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

களமிறங்கிய Avore EX
குஜராத்தை சேர்ந்த Avore Electric நிறுவனம் தனது EX வரிசையில் EX 2S, EX 2 மற்றும் EX 1 என்ற 3 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், LED DRL, 1500W ஆன்போர்டு ஃபாஸ்ட் சார்ஜர், 250Nm டார்க் வழங்கும் மின் மோட்டார் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.1.24 லட்சமாக நிர்ணயம்
