news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news Audi Q9 SUV விரைவில் அறிமுகம், விற்பனைக்கு வந்த Toyota Hilux
tv

Also Watch

tv

Read this

Audi Q9 SUV விரைவில் அறிமுகம், விற்பனைக்கு வந்த Toyota Hilux

பாதுகாப்பில் பாஸ் மார்க்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாதுகாப்பில் பாஸ் மார்க்

புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Toyota Hilux இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Dual-Zone கிளைமேட் கண்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 8-இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட Infotainment System, Android Auto மற்றும் Apple CarPlay உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள இந்த சொகுசு ரக பிக்கப் டிரக்கின் விலை ரூ.31.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய பொலிவுடன் கூடிய ஒன்பதாம் தலைமுறை Toyota Hilux பிக்கப் டிரக், ஜூலையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான, வாகன விநியோகம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Audi Q9 SUV விரைவில் அறிமுகம்
Audi நிறுவனம் தனது Q வரிசையில், உயர் ரகத்தில், Q9 SUV மாடல் காரை இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்கிறது. இந்த SUV 5,310 மிமீ நீளமும், 2,210 மிமீ அகலமும், 1,810 மிமீ உயரமும் கொண்டது. 12.3 அங்குல டிஜிட்டல் டிஸ்பிளே கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 14.5 அங்குல தொடு திரையுடன் Infotainment சிஸ்டம், 4டி ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Audi, வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் அதிக விலை கொண்ட பிரீமியம் எஸ்யூவி மாடலான Audi Q9 SUV கார் மாடலை உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஆடி நிறுவனம் தனது கார்களுக்கு '9' என்ற எண்ணைப் பயன்படுத்துவது இதுவே முதல்முறை. இதன் ஆரம்ப விலை 1.25 கோடி முதல் 1.40 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும், இந்திய சந்தையில் இந்த கார் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

பாதுகாப்பில் பாஸ் மார்க்
Bharat NCAP அமைப்பு நடத்திய பாதுகாப்பு தரத்தை மதிப்பிடும், மோதல் சோதனையில் Tata Punch எலெக்ட்ரிக் SUV காரின் அனைத்து வேரியண்ட்களும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளில் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை இந்த எலெக்ட்ரிக் மாடல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இந்த எலக்ட்ரானிக் மைக்ரோ எஸ்யூவி கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் மிக உயர்ந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது. 18 மாத மற்றும் 3 வயது குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 24க்கு 24 முழு மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

‘X Money’ அறிமுகம்
அமெரிக்காவில் ‘X Money’ என்ற புதிய நிதி சேவையை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் அமெரிக்காவின் கிராஸ் ரிவர் வங்கியில் வைப்புக் கணக்கு தொடங்க முடியும். X பயனர்களுக்கிடையே எந்த கட்டணமும் இல்லாமல் உடனடி பணப் பரிமாற்றம், நேரடி சம்பள வரவு, பில் கட்டணம், அஞ்சல் மூலம் காசோலை அனுப்புதல் உள்ளிட்டவை இந்த சேவையின் கீழ் வழங்கப்படுகின்றன. இது, பயனர்கள் தங்களின் அன்றாட பணப் பரிவர்த்தனைகளை செயலிக்கு வெளியேயுள்ள வங்கிகளுக்குச் செல்லாமல், X தளத்திற்குள்ளேயே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் டெபாசிட் பணத்திற்கு ஆண்டிற்கு 6% வரை வட்டி பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான், உக்ரைன் இடையே வெடிக்கும் மோதல், போர்க்களமாக மாறும் உலகின் மிகப்பெரிய ஏரி

7
22 mins agoshare
டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் ஆயுத அபாயம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau