Also Watch
Read this

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு மீண்டும் 3 ஆக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2ஆம் தலைமுறை மாடல்
கடந்த ஆண்டு தனது முதல் Galaxy Z TriFold-ஐ லிமிடெட் எடிஷன் பதிப்பாக அறிமுகப்படுத்திய பிறகு, அந்நிறுவனம் தற்போது 2ஆம் தலைமுறை மாடலைத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2025ல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை Galaxy Z TriFold மாடல் ஒரு லிமிடெட் எடிஷன் சோதனையாக மட்டுமே சந்தைக்கு வந்த நிலையில், தற்போது அதன் அடுத்த வெர்ஷனான Galaxy Z TriFold 2 மாடலை அதிக எண்ணிக்கையில் தயாரித்து உலகளவில் பரவலாக வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.

iPhone 20 - எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் Apple iPhone 20 முழுவதும் கண்ணாடியால் ஆன நாட்ச் இல்லாத வடிவமைப்பு மற்றும் வளைந்த திரையுடன் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாடலில் மெல்லிய பெசல்கள், பெரிய திரை மற்றும் கண்ணுக்குத் தெரியாத டைனமிக் ஐலேண்ட் அல்லது முன்பக்க கேமரா ஆகியவை இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் தகவல்களின்படி, இந்த மாடல் ஐபோன் வரலாற்றிலேயே மிக முக்கியமான வடிவமைப்பு மாற்றத்தைக் கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் தனது iPhone 18 Pro வரிசை மற்றும் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை (Foldable iPhone) அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு
இந்தியாவில் Honda நிறுவனத்தின் புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கியது. தனது புத்தம் புதிய நியோ-ரெட்ரோ ஸ்டைல் கார்ப்பரேட் பைக்கான Honda CB500 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற ஹோண்டாவின் பிரீமியம் பைக்குகள் அறிமுக விழாவில் இந்த பைக் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் 500cc நடுத்தர பைக் செக்மென்ட்டிற்குப் பலத்த போட்டியை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. சந்தை கணிப்புகளின்படி, இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 2.50 லட்சம் முதல் 2.70 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.