news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

புதிய டெக்னாலஜி, புதிய அனுபவம்

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

CARA AI - Jeep Meridian அறிமுகம்
Jeep SUV தயாரிப்பு நிறுவனத்தின் 85 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் Meridian SUV மாடலை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெறும் 85 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்த சிறப்பு பதிப்பின் விலை, ரூ.36.05 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கார், பிரீமியம் 'Overland' ட்ரிம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 18-இன்ச் கிளாஸ் பிளாக் அலாய் வீல்கள், கதவுகளில் 85th Anniversary டெக்கல் மற்றும் உள்புறத்தில் பிரத்யேக 'Mayan Gold' ஹைலைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 168 BHP பவர், 350 Nm டார்க்-ஐ வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்று உள்ளது.

இந்தியாவில் விரைவில்...
இந்தியாவில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Honda ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை Honda நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்கிறது. உயரமான முன்புறம், பெரிய Adjustable Windscreen, டூயல் LED ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர், சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது E85 Flex-Fuel தொழில் ட்பத்துடன் இணக்கமானது. அதாவது, 85% எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் இதுவாகும். வழுக்கும் சாலைகளில் சவாரி செய்ய ஏதுவாக Honda Selectable Torque Control மற்றும் சிங்கிள்-சேனல் ABS உடன் கூடிய டிஸ்க் பிரேக் வசதி உள்ளது.

ZR-V e:HEV அறிமுகம்
Honda Cars India நிறுவனம் தனது புதிய ZR-V e:HEV என்ற பிரிமீயம் ரக SUVஐ இந்தியாவில், அறிமுகம் செய்துள்ளது. 2.0 லிட்டர் Atkinson Cycle பெட்ரோல் என்ஜின், 184 பிஎஸ் பவர், 315 Nm டார்க், LED ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த காரின் விலை ரூ.47.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லிட்டருக்கு சுமார் 22.8 கிமீ அதிவேக மைலேஜ் தரும் என ஹோண்டா சான்றளித்துள்ளது. வெறும் 7.9 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இதன் முதல் இரண்டு பேட்ச் கார்களும் முன்பதிவிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த காருக்கான வாடிக்கையாளர் டெலிவரிகளும் தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டது.


Related Link
சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?

சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

4
18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau