news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?
tv

Also Watch

tv

Read this

சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?

இத்தனை வசதிகள் இருக்கிறதா?

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள்

ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய iPhone 18 Pro மாடலை இன்னும் இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய விலை எவ்வளவு?
இந்தியாவில் iPhone 18 Pro ரூ.1,34,900க்கும், iPhone 18 Pro Max ரூ.1,49,900க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை ஆப்பிள் நிறுவனம் தனது வெளியீட்டு உத்தியை மாற்றி, பிரீமியம் மாடல்களான புரோ Pro வரிசையை மட்டும் செப்டம்பர் மாதம் வெளியிட்டு, அடிப்படை iPhone 18 மாடலை அடுத்த ஆண்டு 2027ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் வரலாற்றிலேயே முதன்முறையாக, இதன் 48MP முதன்மை கேமராவில் மெக்கானிக்கல் வேரியபிள் அபெர்ச்சர் தொழில்நுட்பம் வரவுள்ளது. இது குறைந்த வெளிச்சத்தில் மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. உலகளவில் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, இந்த முறை விலையில் சற்று ஏற்றம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது

அல்டிமேட் அம்சங்களுடன்
Tecno நிறுவனத்தின் புதிய Camon 50 Ultra 5G ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 3 பேக் கேமராக்கள், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ், டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC, 6,500mAh பேட்டரி, IP69K வரையிலான IP மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.40,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு பிரம்மாண்டமான 6,500mAh பேட்டரி மற்றும் அதை விரைவாக சார்ஜ் செய்ய 45W சூப்பர் சார்ஜ் வசதியும் உள்ளது. இது, தூசி மற்றும் அதிக அழுத்த நீரில் இருந்து முழுப் பாதுகாப்பை வழங்கும் IP66/IP68/IP69/IP69K சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. கூடுதல் பலத்திற்காக இது MIL-STD-810H ராணுவத் தர சான்றிதழுடனும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Oppo Find X10 Pro Max அப்டேட்
Oppo நிறுவனம் புதிதாக விற்பனைக்கு வர உள்ள Oppo Find X10 Pro Max மொபைலில், மூன்று 200 MP கேமராக்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ.1.29 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் 2026க்குள் விற்பனை வரலாம் எனத் தெரிகிறது.துல்லியமான வண்ணங்களை வழங்க Hasselblad நிறுவனத்தின் 3MP மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் 8,000mAh பேட்டரி மற்றும் அதிவேக 120W SUPERVOOC சார்ஜிங் வசதி இதில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை வசதிகளா?
SUV Coupe பிரிவில் தனது இடத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Citroen நிறுவனம், Basal X Comfort Edition மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Comfort Edition-இல் Leatherette சீட், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், JBL ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், முன்புற மற்றும் பின்புற டாஷ்கேம்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன; விலை - ரூ.9.99 லட்சம். இந்த நிறுவனத்தின் 108ஆவது உலகளாவிய ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல், குறைந்த விலையில் பிரீமியம் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 'You' மற்றும் 'Plus' ஆகிய ஆரம்பகட்ட வேரியண்டுகளில் 'Comfort AXS' என்ற புதிய ஃபீச்சர் பேக் உடன் கிடைக்கிறது.

Related Link
விரைவில் விற்பனைக்கு வருகிறது Google Pixel 11

விரைவில் விற்பனைக்கு வருகிறது Google Pixel 11


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல்காந்தி கைது, முதலமைச்சர் விஜய் கண்டனம்

4
9 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau