Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய படத்திற்கு "தகப்பன்" என பெயரிடப்பட்டுள்ளது
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். "கிடா" திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், "மாமன், கருடன்" ஆகிய வெற்றி படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த புதிய படம் உருவாகிறது.
"தகப்பன்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் திரைப்படம்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved