news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் படத்தின் புதிய வீடியோ வெளியீடு
tv

Also Watch

ஜனநாயகன் படத்தின் புதிய வீடியோ வெளியீடு

கோட் சூட்டுடன் முதலமைச்சர் விஜய்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனநாயகன்

முதலமைச்சர் கோட் சூட் காட்சியுடன் இருக்கும் வீடியோ 

முதலமைச்சரின் கோட் சூட் காட்சியுடன் ஜனநாயகன் படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தணிக்கை பிரச்சனையிலிருந்து மீண்டும் வரும் 23ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படம் 3 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் செய்யும் சைகை மற்றும் கோட் சூட்டுடன் முதலமைச்சர் விஜய் இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை 

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ராம், இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார். கதாநாயகியாக அஞ்சலியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் "தட்டுவண்டி"

இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் "தட்டுவண்டி" திரைப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
ஜனநாயகனில் நல்ல அரசியல், எச்.வினோத் நம்பிக்கை

ஜனநாயகனில் நல்ல அரசியல், எச்.வினோத் நம்பிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved