Also Watch
Read this
ஜனநாயகன் படத்தில் நல்ல அரசியலை பேசி உள்ளதாக கூறி உள்ள இயக்குநர் எச்.வினோத், அனைவருக்குமான படமாக ஜனநாயகன் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தடைகள் தாண்டி...
ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியதாவது;
ஜனநாயகன் படத்துக்கு நிறைய தடைகள், நிறைய பிரச்சினைகள் இருந்தன. இறுதியாக திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தப் படத்துக்கு அநீதி நடந்துள்ளதா? என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

சென்சார் சான்று...
ஜனநாயகன் திரைப்படத்துக்கு ‘ஏ’ சென்சார் கொடுக்கப்பட்டது எனக்கும், தயாரிப்பாளருக்கும் வருத்தம் தான். அதை எதிர்த்து சண்டையிடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை. தற்போது படத்தை ரிலீஸ் செய்வது தான் எங்களுடைய நோக்கம்.

முதலில் ‘UA’ தான் கொடுத்தார்கள். தற்போது ‘ஏ’ கொடுத்து உள்ளனர். இதனை எதிர்க்க எங்களிடம் போதிய நேரமில்லை.
தனிப்பட்ட சென்சார் அமைப்பு மீது எப்படி கோபம் கொள்ள முடியும்?

வெளிப்படையாக பேச முடியவில்லை
அவர்களால் மட்டுமே இது நடக்கவில்லை என நான் நினைக்கிறேன். சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள். படத்துக்கு பிரச்சினை வரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. விஜய் சார் மீது, பொது மக்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரசியல் பேசி உள்ளோம்
எத்தனையோ இயக்குநர் இருக்கும்போது, என்னை விஜய் சார் ஏன் தேர்ந்தெடுத்தார்? என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. நிறைய இயக்குநர்கள் கதை சொன்னார்கள். பெண்கள் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் விஜய்க்கு இருந்தது. அதனால் இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருக்கு பிடித்த பல விஷயங்கள் இருந்தன. ’பகவந்த் கேசரி’ படத்தை பாதி எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல அரசியல் வைத்து பேசி இருக்கிறோம்.

ஜனநாயகன் லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?
இப்போது, இது பெரிய பிரச்சினையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. இதற்கு விஜய் ட்வீட் போட்டுட்டு இருக்காரு என பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால், இது ஒரு சட்டப்பிரச்சினை அது தொடர்பான முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு எச்.வினோத் கூறி உள்ளார்.