news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் அஜித்குமாரின் மகன் கால்பந்து தொடரில் சாம்பியன்
tv

Also Watch

நடிகர் அஜித்குமாரின் மகன் கால்பந்து தொடரில் சாம்பியன்

இணையத்தில் வைரல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆத்விக்

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாலினி மகிழ்ச்சி

நடிகர் அஜித்குமாரின் மகன் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அஜித்குமார் திரைத்துறையை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கிச்சூடு என தனது பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த சூழலில், மஹோகனி யூத் லீக் கால்பந்து தொடரில் ஆத்விக்கின் அணி சாம்பியம் பட்டம் வென்றுள்ளது.

நடிகர் தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் புதிய படம்

நடிகர் தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

மொட்டை தலையுடன் நடிகை நயன்தாரா புகைப்படங்கள்

"டாக்ஸிக்" திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை நயன்தாரா திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து நயன்தாரா மற்றும் திரைப்படக் குழுவிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், இந்த படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ், நடிகைகள் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Link
காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்

காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டீனேஜர்களுக்கான புதிய CHAT GPT-ஐ அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved