Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் ராம் சரணுடன் இயக்குநர் புச்சி பாபு சனா :

'Peddi' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ராம் சரணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அந்த படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், முழுப் படப்பிடிப்பும் இன்னும் 6 நாட்களில் நிறைவடையவுள்ளதாகவும், தன்னை ஊக்கப்படுத்திய மனிதர் ராம் சரண் என குறிப்பிட்டுள்ளார்.
'ஹெர்மன் பி வெல்ஸ்' விருது வென்ற ரோஜாவின் மகள் :

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா, அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டியானா பல்கலைக் கழகத்தின் உயரிய விருதான 'ஹெர்மன் பி வெல்ஸ்' ((Herman B Wells Award - 2026)) விருதை வென்று அசத்தியுள்ளார். கல்வித் தகுதி, மாணவர் அமைப்பு மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் சாய் அபியங்கர் நடிக்கிறாரா?
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு சுத்தமாக நடிப்பே வராது என்றும், ஒரு வேலை அந்த திறமை இருந்திருந்தால் முன்னரே நடிக்க போயிருப்பேன் எனவும் சாய் அபியங்கர் கூறினார்.
பாண்டிராஜுடன் மீண்டும் கை கோர்க்கும் கார்த்தி :

சர்தார்-2, மார்ஷல் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் கார்த்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், திரைப்படத்தை நடிகர் சூர்யாதான் தயாரிப்பார் என பேச்சு அடிபடுகிறது.
பிட்னஸ் ரகசியம் குறித்து பேசிய நடிகர் சிம்பு :

அரசன் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நடிகர் சிம்பு, தனது பிட்னஸ் ரகசியம் குறித்து பேசியுள்ளார். அசைவம் சாப்பிட்ட சமயங்களில் உடல் சோர்வாக இருந்ததை உணர்ந்ததாகவும், சைவத்துக்கு மாறிய பிறகு உடல் லேசாக இருந்ததாகவும் கூறினார். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உணவு முறையில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved