news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சேயோன்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிவகார்த்திகேயன் சேயோன்

புதிய திரைப்படத்தை தயாரிக்கும் wunderbar films நிறுவனம் :

தனுஷின் wunderbar films நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரமேஷ் நந்தனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை ஹரிதா லிங்குசாமி இணைந்து தயாரிக்கிறார். நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 8-ஆம் தேதி வெளியாகும் '29' திரைப்படம் :

மேயாதமான், ஆடை திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் எழுதி இயக்கும் '29' என்ற திரைப்படம் மே 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

திரிஷ்யம் இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் :

தான் இயக்கும் திரைப்படங்கள் மெகா சீரியல் போல் உள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பின்னால் வேறு சில காரணம் உள்ளதாக திரிஷ்யம் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறினார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் வண்ணமயமான லைட்டிங் முறை பயன்படுத்துவதாகவும், அது மேக்கிங்கில் தெரியும் எனவும் விளக்கமளித்தார்.

சித்தார்த்துடன் 4ஆவது முறையாக இணையும் திரிஷா :

சித்தார்த்துடன் மூன்று படங்களில் நடித்துள்ள நடிகை திரிஷா அடுத்ததாக தில் ராஜு தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் 4ஆவது முறையாக இணைகிறார். இயக்குநருக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வரும் மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் :

'தாய் கிழவி' முலம் பிரபலமான சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 27ஆம் தேதி முதல் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. தாய் கிழவி திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதால் சேயோனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Link
மும்பைக்கு குடிபெயரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்..?

மும்பைக்கு குடிபெயரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்..?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு

4
16 mins agoshare
முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved