news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மும்பைக்கு குடிபெயரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்..?
tv

Also Watch

tv

Read this

மும்பைக்கு குடிபெயரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்..?

Mumbai

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள் 1

பிரேமலு- 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் :

பிரேமலு 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..! நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான ‘பிரேமலு’ 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. இதனால் 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், பிரேமலு -2 படத்திற்கு வாய்ப்பே இல்லை என அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான திலீஷ் போத்தன் தெரிவித்துள்ளார்.

2 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்த ’பூத் பங்களா’ :

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள பூத் பங்களா திரைப்படம் வெளியான 2 நாட்களில் 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான இப்படத்தில் நகைச்சுவை, திகில், சஸ்பென்ஸ் நிறைந்த இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகாவதார் பரசுராம்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ :

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் (( Hombale Films )) நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் ‘மகாவதார் பரசுராம்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது..! அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான 'மகாவதார் நரசிம்மா' திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பரசுராம் படத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மும்பைக்கு குடிபெயரும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்..?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மும்பைக்கு குடி பெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மும்பையில் வசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அட்லீ இயக்கத்தில் ராகா படத்தில் அவர் பிசியாக நடித்து வருவது குறிப்பிடதக்கது.

கவின் - நயன்தாரா இணைந்து நடித்து ஹாய் திரைப்படம் :

கவின் - நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு இயக்கத்தில் வயதில் மூத்த பெண்ணை இளைஞர் காதலிப்பது போன்ற கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ’கர’ படத்தின் டிரெய்லர் வெளியானது :

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Link
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கும்பகோணத்தில் 12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்

0
7 mins agoshare
கும்பகோணம் கருடசேவை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved