Also Watch
Read this
தவெக தலைவர் விஜய் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், மனைவி சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக 35 கோடி ரூபாயை வழங்கி சுமூகமான முறையில் விவாகரத்து வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிக்கலில் விஜய்
அரசியலுக்கு வந்ததில் இருந்தே பல்வேறு சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து மீண்டும் வரும் விஜய்க்கு, தீராத தலைவலியாய் மாறியிருக்கிறது மனைவியின் விவாகரத்து வழக்கு. காலை சுற்றிய பாம்பை போல் தேர்தல் நேரத்தில் இறுக்கியிருக்கும் வழக்கில் இருந்து விஜய் எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாய் அமைந்திருக்கிறது.

உரிமைக்குரலால்...
தேர்தல் நேரத்தில் மனைவி சங்கீதா எழுப்பியிருக்கும் உரிமைக் குரலால் ஆடிப்போன விஜய், அவரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இத்தனை நாட்களாய் தலைவருக்கு ஊணும் உயிருமாய் உற்ற துணையாய் இருந்தவரே அவருக்கு எதிராக கிளம்பிய சம்பவம் தவெகவினரை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையேயான கடைசிகட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது.

ஜீவனாம்சம்...
மும்பையில் இருந்து வந்த விஜய் - சங்கீதாவின் குடும்ப நண்பர் ஒருவர் இருதரப்புக்கும் மத்தியில் மத்தியஸ்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. இருதரப்பு வழக்கறிஞர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய அந்த நண்பர், இருவரையும் சேர்த்துவைக்க கடைசி வரை முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் வேறு வழியே இல்லாமல், இருவரும் சுமூகமாக பிரிவது என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் சுமூகமாக செல்ல வேண்டுமென்றால் ஜீவனாம்சமாக தாம் கேட்ட 250 கோடி ரூபாயை தரவேண்டும் என மனைவி சங்கீதா அடம்பிடித்த நிலையில், வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே தன்னால் தரமுடியும் என விஜய் கைவிரித்துவிட்டதாக தகவல் கசிந்திருக்கிறது.

மனைவிக்கு மட்டும்...
மகன், மகளை வைத்து தாம் எப்படி சமாளிக்க முடியும் என சங்கீதா குமுறிய நிலையில், இருவரையும் தாம் பார்த்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பீட்டை குறிப்பிட்டு தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் சங்கீதா ஜீவனாம்சம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால், விஜய் சங்கீதாவுக்கு மட்டுமே ஜீவனாம்சம் வழங்க முடியும், குழந்தைகளை தானே பார்த்துக் கொள்கிறேன் என திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், சங்கீதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை அவரது வழக்கு நடைமுறைகளில் தான் தெரியவரும் என்கின்றனர் விவரமறிந்த விஜய் வட்டாரங்கள்.