Also Watch
Read this
By: Manigandan Raja

துருவ் விக்ரமை Unfollow செய்த நடிகை அனுபமா
கடந்த சில மாதங்களாக நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலிச்சுட்டிருக்கறதா பல்வேறு தகவல்கள் இணையத்துல பரவிட்டிருந்துச்சு. இந்த நிலையில் இப்போ, அனுபமா தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு பதிவு போட்டுருக்காங்க. அதுல, "இறுதியில் என் மன அமைதியை கண்டுபிடிக்க சில முடிவுற்ற பாதைகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
இனி என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். யாருடைய அனுமதியும் தேவையில்லை. எந்த பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடித்து, என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன்" ன்னு உருக்கமாக தெரிவிச்சிருக்காங்க. கூடவே "என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி.
இனி குணமடைவதும், சுதந்திரமாக வாழ்வதும், என்னை நானே தேர்ந்தெடுப்பதும்தான் என் பயணம்"னும் பதிவிட்டுருக்காங்க. அதே மாதிரி, தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல இருந்து துருவ் விக்ரமை அனுபமா Unfollowவும் செஞ்சிருக்காங்க. இத வெச்சு ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டதா நெட்டிசன்கள் இணையத்துல பேசிட்டிருக்காங்க. ஆனா பிரிவு குறித்து இதுவரை துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரலை
வசூலில் வரலாறு படைத்த 'தி ஒடிஸி'

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்துல வெளியாகியிருக்கற 'தி ஒடிஸி' (The Odyssey) திரைப்படம், உலகம் முழுக்க 264.1 மில்லியன் டாலர் வசூலிச்சிருக்கறதாவும், அமெரிக்காவுல மட்டும், 124.5 மில்லியன் டாலரும், வெளிநாடுகளில் 139.6 மில்லியன் டாலரும் வசூலிச்சிருக்கறதா தகவல் வெளியாகிருக்கு.
இந்த வசூல் இயக்குநர் நோலனின் திரைப்பயணத்துல அதிக வசூல் செஞ்ச முதல் வார இறுதி (Biggest Opening Weekend) படமா பார்க்கப்படுது. இதுல நோட் பண்ண வேண்டியது என்னனு பாத்தீங்கனா, இந்த படத்தோட தயாரிப்பு செலவு 250 மில்லியன் டாலராகவும்,விளம்பரச் செலவு 125 மில்லியன் டாலராகவும் மொத்த பட்ஜெட்டே 375 மில்லியன் டாலர்-ஆ இருக்குது. இப்படி இருக்கும் போது, இப்ப வர்ற வசூலைப் பார்த்தா இந்த படம் வர்ற நாட்கள்ல இன்னும் அதிக வசூலை குவிக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
நடிகர் மணிகண்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தேசிங் பெரியசாமி, அடுத்ததாக நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருக்கு. இந்த படத்தோட முன்தயாரிப்பு (Pre-Production) வேலைகள் தற்போது விறுவிறுப்பா நடந்துட்டு வர்றதா சொல்லப்படுது.
அதே மாதிரி, இந்த படத்தோட பட்ஜெட் சுமார் 40 கோடி ரூபாயில இருந்து 50 கோடி வரைக்கும் இருக்கும்னு சொல்றாங்க. இதன் மூலம், மணிகண்டன் தன்னோட திரைப்பயணத்துல இதுவரை நடிச்சிருக்கற படங்கள்லயே அதிக செலவுல உருவாகுற படமா இது அமையும்னு எதிர்பார்க்கப்படுது.
இந்த படத்தோட படப்பிடிப்ப 2027 ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கறதாவும், விரைவில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பத்துன அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்ங்கற தகவல் வெளியாகியிருக்கு.