Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் அஜித் நடிக்கும் படத்தின் பணிகள் ஆல்மோஸ்ட் முடிவாகியுள்ளது.
அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகுமென இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். படத்திற்கான முன்னோட்ட பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தரப்பிலிருந்தோ, தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
25 கோடி பார்வையாளர்களை கடந்த "முட்ட கலக்கி" பாடல்

"யூத்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "முட்ட கலக்கி" பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 25 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை கென் கருணாஸ் எழுதி, பாடியுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் முழு படமும் கசிந்தாலும் கூட திரையரங்குகளில் ஜனநாயகனை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved