Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் பாரி இளவழகன் நடித்துள்ள "அன்பே டயானா"
நடிகர் பாரி இளவழகன் நடிப்பில் வெளியான "அன்பே டயானா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. நகைச்சுவை காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட, வயதான தோற்றத்தில் காட்சியளித்த சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தாடி, மீசை இல்லாமல் வழக்கமான கட்டுமஸ்தான உடலமைப்பு இல்லாமலும் காணப்பட்டார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் 60 வயதான சல்மான் கான், தற்போது பார்க்க 80 வயது முதியவர் போல காட்சி அளிப்பதாகவும், அவருக்கு என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"மண்டாடி" திரைப்படத்தின் முதல் ப்ரோமோ பாடல் வெளியீடு

நடிகர் சூரி நடித்து வரும் "மண்டாடி" திரைப்படத்தின் முதல் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள "மண்டாடி மண்டாடி" பாடல், கடலோர படகு பந்தயத்தை மையமாக வைத்து உருவான அதிரடி புரோமோ பாடலாகும். இந்த பாடலில் சூரியின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.