Also Watch
Read this
By: Manigandan Raja

வெங்கடேஷ் உள்ளிட்ட திரையுலக நண்பர்களுக்கு குஷ்பு நன்றி
தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 1986ல் ‘கலியுக பாண்டவுலு’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு, இயக்குநர் ரகவேந்திர ராவ், சுரேஷ் நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தம்முடன் பயணிக்கும் ரசிகர்களுக்கும், வாழ்நாள் நண்பராக பயணிக்கும் நடிகர் வெங்கடேஷ்-க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுக்கு பிறகு இன்ஸ்டா DP-யை மாற்றிய பிரபாஸ்
நடிகர் பிரபாஸ், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகுபலி படத் தோற்றத்தில் இருந்த இன்ஸ்டாகிராம் DP படத்தை மாற்றியுள்ளார். தற்போது ஹனு ராகவபுடி இயக்கும் வரலாற்றுப் போர் பின்னணி கொண்ட Fauzi படத்தின் புகைப்படத்தை தனது புதிய DP-யாக பிரபாஸ் வைத்துள்ளார்.

படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மண்டாடி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் மண்டாடி படத்தின் இரண்டாவது பாடலான உசுரே நீதான் புள்ள வெளியாகியுள்ளது. ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகளில், கபில் கபிலன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படம், மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved