Also Watch
Read this
By: Manigandan Raja

தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என கருத்து
நடிகை த்ரிஷாவின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லண்டனுக்கு சென்றுள்ள அவர், தனது தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
இந்த பதிவை பார்த்த பலரும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், பிரபலம் என்பதற்காக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிர்கிஸ்தானில் 341 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்தேன்
கிர்கிஸ்தானில் 341 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் பயணம் செய்ததாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், மலைப்பாங்கான, சரளை கற்கள் நிறைந்த சாலைகள் வழியாகவும்.

ஆழமான மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகள், மலைப்பாதைகள் வழியாக இறங்கியும், ஓடைகளின் ஓரமாக, முடிவில்லாத ஆசிய புல்வெளிகள் வழியாகவும் பட்டுப்பாதை என்று நன்கு அறியப்படும் அந்த புனிதமான தரையிலும் சைக்கிளில் பயணித்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "மைசா" திரைப்படம்
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "மைசா" திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், பழங்குடியின போர் வீராங்கனையாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

தற்போது, கையில் ஈட்டியுடன் தலைவிரி கோலமாக ரத்தக் கறைகளுடன் ராஷ்மிகா நிற்கும் மிரட்டலான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved