news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடித்துள்ள "அக்கா"
tv

Also Watch

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடித்துள்ள "அக்கா"

திரில்லர் பாணி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கீர்த்தி சுரேஷ்

"அக்கா" இணையத் தொடர் அக்டோபர் 30-ம் தேதி வெளியீடு

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடித்துள்ள "அக்கா" இணையத் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத்தொடரை ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இந்த தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"பூக்கி பொன்னம்மா" தமிழ் சுயாதீன இசை பாடல்

"பூக்கி பொன்னம்மா" தமிழ் சுயாதீன இசை பாடல் குறித்த அறிவிப்பை "அய்யனார் துணை" சீரியல் நாயகி நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதல்முறையாக லண்டனில் படமாக்கப்பட்ட இந்த இசை பாடலில் மதுமிதாவுடன் பாலாஜி இணைந்து நடனமாடி உள்ளார்.

சரிகம செளத் இசை நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடல் வரும் 7-ம் தேதி வெளியாகிறது. கு.கார்த்திக் வரிகளில் உருவான இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

நடிகர் யாஷ் - நயன்தாரா நடித்துள்ள "டாக்ஸிக்" திரைப்படம்

யாஷ் நடித்துள்ள "டாக்ஸிக்" திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற ஜீ5 நிறுவனம், செப்டம்பரில் வெளியிட இருந்தது.

ஆனால், படம் வெளியாகாத நிலையில், அக்டோபர் வெளியீட்டிலும் டாக்ஸிக் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இந்த படம் ஓடிடியில் தாமதமாகவே வெளியாகவுள்ளது.

Related Link

"சிக்மா" திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்க்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved