news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படம்

விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகை தமன்னா நடித்துள்ள  பாலிவுட் திரைப்படம்

"கட்டா குஸ்தி - 2" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபுள்யூ சொகுசு காரை பரிசளித்து உள்ளார்.

வெற்றியைத் தொடர்ந்து பரிசு
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் 3 நாள்களில் 22 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
நடிகை தமன்னா நடித்துள்ள "தி விவான்" பாலிவுட் திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில், பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் குமார் மிஷ்ரா இயக்கி உள்ளார். இந்த படத்தின் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பாலாஜி மோஷன் பிகசர்ஸுடன் முதல்முறையாக டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் இணைகிறது.

இயக்குநர் மிஸ்கின் இயக்கி, இசையமைத்துள்ள படம்
விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார், கலையரசன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து உள்ளார். இது ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும்.

புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள "தி இந்தியா ஸ்டோரி" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் தல்படே ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது போலவும், பின்னணியில் மும்பை உயர் நீதிமன்றம் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இயக்குநர் சேட்டன் டிகே இயக்கத்தில், எம்.ஐ.ஜி. புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்திற்கு சாகர் பி.ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது.

Related Link
ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு க்ரீன் சிக்னல்

ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு க்ரீன் சிக்னல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

31 பேருக்கு அரசு பணிக்கான ஆணை, ஒருவருக்கு மட்டும் கருணைத் தொகை

6
35 mins agoshare
கண் கலங்கிய முதல்வர் விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau