Also Watch
Read this
By: Manigandan Raja

ஜூலை 23-ல் ரிலீசாகும் 'ஜனநாயகன்'
ஹெச். வினோத் இயக்கத்தில் தமிழக முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்துக்கு சமீபத்தில் ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கி இருந்தாங்க. இதனால, ஜனநாயகன் படம் வருகிற ஜூலை 24ம் தேதி ரிலீஸ் ஆகிரும்னு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திட்டு இருந்தாங்க.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிசாமி தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு HINT கொடுத்துருக்கிறாரு. அதில், "Alright The hype is real 23rd - RAVANA MAVAN COMING.." என்று பதிவு செய்துருக்கிறாரு. இதன் மூலம் படம் ஜூலை 23-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
ஒரு கையில் சிங்க குட்டி, மற்றொரு கையில் கேமரா

அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கும் புதிய திரைப்படமான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகிருக்கு. இந்த போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறாரு.
ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துட்டு வருது. மேலும், இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்னு படக்குழு தெரிவித்திருக்காங்க.
டிமாண்டி காலனி-3 திரைப்படத்துக்கு 'A' சான்றிதழ்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி-3 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் வழங்கிருக்காங்க.
திரில்லர் காட்சிகளுடன் வெளியான முதல் இரண்டு பாகங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருதுனே சொல்லலாம். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படம் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வெளியாக இருக்கு.