news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "என்னோட அடுத்த பிளான் இது தான்.." மனம் திறந்த பாரி இளவழகன்
tv

Also Watch

"என்னோட அடுத்த பிளான் இது தான்.." மனம் திறந்த பாரி இளவழகன்

பாரி இளவழகன்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anbe diana

அடுத்த படங்கள் குறித்து மனம் திறந்த பாரி இளவழகன்

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் வருகிற ஜூலை 17-ம் தேதி வெளியாக இருக்கு. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாரி இளவழகன் மனம் திறந்து பேசிருக்காரு. அதில், "அன்பே டயானா' திரைப்படத்தை இயக்கி முடிச்சிட்டேன்.

அடுத்து மற்றொரு இயக்குநர் இயக்கும் திரைப்படத்தில் நான் நடிகரா நடிச்சிட்டு வரேன் அந்தப் படமும் இந்த ஆண்டுக்குள்ளேயே வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது. அதே நேரத்தில், எனது அடுத்த இயக்குநர் படத்திற்கான கதையையும் எழுதி வரேன். திருவண்ணாமலையை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

” என்று தெரிவித்துருக்கிறாரு. மேலும், ”எதிர்காலத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திட்டமும் தனக்கு இருக்கு.." என்று மனம் திறந்து பேசிருக்கிறாரு.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' ஹீரோ ரியோ?


இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீ திவ்யா, பிந்து மாதேவி, மொட்டை ராஜேந்திரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்கொடுத்துருந்துச்சு.

இந்த படம் இன்னமுமே சிவகார்த்திகேயன் கெரியரில் பேசப்பட்டு வரும் படமா பார்க்கப்படுதுனே சொல்லலாம். இந்த நிலையில், "தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தின் பணிகள் தொடங்கி இருக்கிறதாகவும் அதில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறதாகவும் அந்த படத்தை ரியோ ராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்' (River Route Studios) மூலம் தயாரிக்கிறதாகவும் தகவல்கள் வெளியாகிருக்கு.

AK64 படத்தில் கயாடு லோஹர்?


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுருந்துச்சு. இதனை தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வராரு. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறாரு.

ஏற்கனவே, அஜித்தின் 64வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா, ஸ்வாசிகா நடிப்பதாக தகவல் வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகிருக்கு.

இந்த புதிய தகவல் கயாடு லோஹர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு வருது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved