news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவம்
tv

Also Watch

இந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவம்

டெல்லி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சர்பானந்த சோனாவால்

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆலோசனை 

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்((Sarbananda Sonowal)), உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

கப்பல்களை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்காக பிரத்யேகத் தொடர்பு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் 24 மணி நேரமும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கேரள அரசை கடுமையாக விமர்சித்த சிபிஎம் எம்.ஏ. பேபி 

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, மென்மையான இந்துத்துவ போக்குகளை வெளிப்படுத்துவதாக சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசின் அனுமதியின்றி RSS மற்றும் பாஜக தொடர்புடையவர்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் துணை வேந்தர்களாக நியமித்து வருவதாக விமர்சனம் செய்தார். இதை எதிர்ப்பதற்குப் பதிலாக மாநில அரசு மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .

டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 3 பெண் தொழிலாளர்கள் பலி 

பீகார் மாநிலத்தில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அராரியா மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக பெண்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.

மேலும் படுகாயமடைந்த 6 பேரை போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Related Link
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved