Also Watch
Read this
By: Manigandan Raja

பாலியல் தொந்தரவு - பாடம் புகட்டிய பெண்!
மத்திய பிரதேச மாநிலம் சாகர்((Sagar)) மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நிதிஷ் கோண்ட் ((Nitish Gond)) என்பவன் பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்று அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டான். அப்போது அந்த நபரின் கன்னத்தை அந்த சிங்கப்பெண் பதம் பார்க்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஓடும் ரயிலில் பூஜை - கடும் எதிர்ப்பு

டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்ற Paschim Express ரயிலில் பூஜைகள் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி கடும் எதிர்ப்பு எழுந்தத நிலையில், தனியாரால் முன்பதிவு செய்யப்பட்ட சொகுசுப் பெட்டியில் தங்களுக்கு தெரிந்தே நடத்தப்பட்டதாக வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரயில்வேயின் வரவேற்புப் பெட்டிகளில் வழிபாட்டுச் சடங்குகள் நடப்பதால், ரயில்வே ஒரு சர்க்கஸாக மாறி வருகிறது என விமர்சனம் எழுந்தது.
மது குடித்ததை தட்டிக் கேட்ட ஊழியருக்கு அடி
உத்தரகாண்டின் ரிஷிகேஷில் வாகன நிறுத்துமிடத்தில் அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்ட பணியாளர் மீது சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லியில் இருந்து சுற்றுலா சென்ற 6 பேர், தலைக்கேறிய போதையில் சரமாரியாக அடித்து, எட்டி உதைத்தனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved