news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
tv

Also Watch

ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருத்தணி, திருவள்ளூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போலீசார் தீவிர சோதனை

சென்னையில் இருந்து திருப்பதி நோக்கியும், திருப்பதியில் இருந்து சென்னை மற்றும் திருவள்ளூர் நோக்கியும் சென்ற கனரக வாகனங்கள், குறிப்பாக டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணல் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றுக்கான அரசு அனுமதி ஆவணங்கள், போக்குவரத்து அனுமதி மற்றும் பிற தேவையான பதிவுகள் முறையாக உள்ளனவா என போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆவணங்கள் சரியாக இருந்த வாகன ஓட்டுநர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர். அதேபோல், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்களையும் போலீசார் நிறுத்தி, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் (ஆர்சி புக்), காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் காரணம் கேட்டு, சாலை
பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்து எச்சரிக்கை விடுத்தனர்.


மேலும், ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தவர்களையும் தடுத்து நிறுத்தி, இது போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்லாமல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதையும் விளக்கி, இனி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை மதித்து, வேக வரம்பை கடைபிடித்து, தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் இதுபோன்ற தீவிர வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Link
வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி

வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved