news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புகழ்பெற்ற ஃபொன்டைன்ப்ளூ காடுகளில் பயங்கர தீவிபத்து
tv

Also Watch

tv

Read this

புகழ்பெற்ற ஃபொன்டைன்ப்ளூ காடுகளில் பயங்கர தீவிபத்து

பாரீஸ் - பிரான்ஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Forest fire

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து சேதம் 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதமடைந்தன. புகழ்பெற்ற ஃபொன்டைன்ப்ளூ ((Fontainebleau)) காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீ, கட்டுக்கடங்காத வேகத்தில் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

இதனால், வரலாற்றிலேயே முதன்முறையாக நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து பிரத்யேக தீயணைப்பு விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. சென் எட் மார்ன் தீயணைப்புத்துறையை சேர்ந்த ஏராளமான வீரர்கள் நவீன ரக தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் 

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை குறிவைத்து அந்நாட்டின் அரசு படைகள் அதிரடி வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த விமான நிலையத்தில் ஈரான் விமானம் ஒன்று தரையிறங்குவதை தடுப்பதற்காக, தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த விமான நிலையம், அரசுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஏமன் தேசிய விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி உள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரானுக்கு ரஷ்யா அவசர உதவி 

ஈரானுக்கு அவசர உதவியாக ரஷ்யா தனது அதிநவீன ராணுவ கட்டுப்பாட்டு விமானத்தை அனுப்பியுள்ளது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அவசர காலத்தில் வானில் இருந்தபடியே போரை வழிநடத்த பயன்படுத்தும் "டி.யு.-214பி.யு." என்ற வான்வழி கட்டளை மைய விமானம், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.

இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த விமானம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பதோடு, மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகத்தில், தொடர்ந்து 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் துாரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

Related Link
நீல லேசர் மூலம்

நீல லேசர் மூலம் "செயற்கைச் சூரியன்", இயற்பியல் நாயகனின் மின்சாரக் கனவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்

0
2 mins agoshare
மத்திய பிரதேசம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau