Also Watch
Read this
By: Manigandan Raja

கப்பல் போக்குவரத்துக்கு 20% கட்டணம்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா தான் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன் எனவும், பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இனிவரும் காலங்களில் அமெரிக்கா தான் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிக்கான அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படும் எனவும், இதற்காக இப்பகுதி வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கப்பல் பராமரிப்பு தளம் மீது பல ட்ரோன்களை ஏவி தாக்குதல்

ஈரானின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் மீது பயங்கர வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் கடற்படை தளத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகம் மீது பல ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள மத்திய கட்டளை பிரிவு, அது தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.