news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு
tv

Also Watch

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

ஜோஸ் பட்லர்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Buttler

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு 200-வது ஒருநாள் போட்டி 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் கேப்டனாக களமிறங்கும் இந்த அணியில், ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியம் டாஸன், ஜோஷ் டங், அடில் ரஷீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்த போட்டி, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லரின் 200-வது ஒருநாள் போட்டியாகும். கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணியில் அறிமுகமான இவர், இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியா - இலங்கை டெஸ்ட் 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் இருவரும் 2 மற்றும் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செனுஜா வெகுநகோடா - கேப்டன் விமத் தின்சரா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். தின்சரா அரைசதமும், வெகுநகோடா இரட்டை சதமும் அடிக்க அணி வலுவான நிலையை எட்டியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 89 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது 

கொலம்பியாவில் நடைபெற்ற சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்கள் 5 பேருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தேர்வில் இந்தியா உட்பட 87 நாடுகளை சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த சூழலில், இந்த சாதனை நமது இளைஞர் சக்தியின் எல்லையற்ற திறனையும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வத்தையும் பறைசாற்றும் மற்றொரு உதாரணம் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த போட்டியின் பல்வேறு பதிப்புகளில் நமது மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

Related Link
முதல் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் - ஸ்பெயின் பலப்பரீட்சை

முதல் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் - ஸ்பெயின் பலப்பரீட்சை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved