news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வியட்நாமில் இருந்து தாயகம் வந்து சேர்ந்த 10 பேரது உடல்கள்
tv

Also Watch

tv

Read this

வியட்நாமில் இருந்து தாயகம் வந்து சேர்ந்த 10 பேரது உடல்கள்

குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர்

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், 10 பேரின் உடல்களும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

சென்னை, கோவை, திருச்சி...
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களில் நான்கு பேரின் உடல்கள் சென்னை விமான நிலையத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை சந்தோஷ், கும்மிடிப்பூண்டி பாபு, வேலூர் வினயகுமார், திருவண்ணாமலை ரவிசங்கர், ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாயகம் வந்த தமிழர்களின் உடல்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கோவைக்கு கொண்டுவரப்பட்டன.

பாலாஜி, அழகுராஜன், ஷேக் அப்துல்லா ஆகியோரின் உடல்களை திருச்சிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

வியட்நாமில் இருந்து...
வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேரின் உடல்கள் இன்று ஜூலை14ஆம் தேதி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே ஜூலை 11ஆம் தேதியன்று கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபரீத விபத்து நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த...
உயிரிழந்தோரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், கேரளத்தைச் சேர்ந்த இருவரும் இருந்துள்ளனர்.

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டன.

அவர்களின் உடல்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.

உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஆழ்ந்த இரங்கல்...

Related Link
சோகத்தில் முடிந்த வியட்நாம் பயணம், கதறி துடிக்கும் குடும்பத்தினர்

சோகத்தில் முடிந்த வியட்நாம் பயணம், கதறி துடிக்கும் குடும்பத்தினர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

0
1 min agoshare
Buttler








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau