news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக-அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் யார்? நிர்மல்குமார் அதிரடி
tv

Also Watch

tv

Read this

திமுக-அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் யார்? நிர்மல்குமார் அதிரடி

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க முடியுமா?

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக, அதிமுக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் இருப்பார்கள் என்று, இருவரது அண்மைக்காலப் பேச்சுகளை சுட்டிக்காட்டி அமைச்சர் நிர்மல்குமார் சாடி உள்ளார்.
குதிரை பேரம் தொடர்பாக சிபிஐயிடம் திமுக டைம் பாஸுக்காக புகார் கொடுத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்து உள்ளார். குதிரை பேரம் குறித்து நேரடியாக சிபிஐ விசாரிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒருங்கிணைப்பாளர்களாக...
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;
திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும் தான் இருக்கப் போகிறார்கள் என நினைக்கிறேன். அதிமுக தென் மாவட்டங்களில் மாவட்ட அளவில் மட்டுமே உள்ளது. நிர்வாகிகள் வேறு எங்கும் இல்லை. அதிமுகவில் பொதுச் செயலாளர் என ஒருவர் இருப்பதாகவே அக்கட்சி தொண்டர்களுக்கு நினைவு இல்லை. குதிரை பேரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் சிக்கியுள்ளனர்.

புகார்கள் மீது நடவடிக்கை
தவெக ஆட்சியில், முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்படும். இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யாரையும் அழைக்கவில்லை
எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால் தான் அது குதிரை பேரம். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகல் செய்துவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. பதவி விலகல் செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும்? குதிரை பேரம் சம்பந்தமாக, ஆர்.எஸ்.பாரதி டைம் பாஸ்-க்கு சிபிஐக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இவ்வாறு நிர்மல் குமார் கூறி உள்ளார்.

Related Link

"முதலமைச்சர் விஜய்தான் களவாணி" என இபிஎஸ் சாடல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காதான் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்

0
8 mins agoshare
அமெரிக்கா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau